தன்னுடைய தயாரிப்பான வெளுத்து கட்டு திரைப்படம் இன்று ரிலீசாகும் நிலையில், எஸ் ஏ சந்திரசேகரன் அடுத்து தயாரவது எதற்கு தெரியுமா? தன்னுடைய 'சொந்த தயரிப்பான' மகன் விஜயை அரசியலில் வெளுத்து கட்ட வைப்பதற்கான முயற்சிகளில் முழு மூச்சாய் இறங்குவது தான்.
விஜயை தமிழகத்தின் முதல்வராக்குவதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கும் எஸ் ஏ சி, அதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் பாதை- கேட்க கொஞ்சம் வினோதமாய் இருந்தாலும் விவரமானது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
"விஜயை சினிமாவில் பிரபலமாக்க தன்னுடைய அறிமுகமான விஜயகாந்தின் உதவியை நாடி செந்தூரப்பாண்டி படமெடுத்த எஸ் ஏ சி, தற்போது தன் மகனை அரசியல் தலைவர் ஆக்குவதற்கும் கேப்டனின் துணையையே நாட இருக்கிறார். தன்னுடைய தந்தையின் திட்டபடி விஜய் கூடிய விரைவில் தேமுதிகவில் சேருவார்," என்று நம்முடைய காதை கடித்தார் கோடம்பாக்க கோடங்கி ஒருவர்.
"தேமுதிகவில் சேர்ந்து அரசியல் பாலபாடங்களை பயில போகும் விஜய் சமயம் வரும் போது தன் தந்தையின் திட்டப்படி தனிக்கட்சி தொடங்குவார். அதுவரை திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பார்," என்று அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் பின்னணியை விவரித்து அவர் கூறுகையில்: "எடுதத எடுப்பில் தனிக்கட்சி ஆரம்பிப்பது தற்கொலைக்கு சமம் என்பது விஜய்க்கும் சரி, அவரது தந்தைக்கும் சரி நன்றாக தெரியும். அதனால் தான் சென்ற வருடம் காங்கிரசின் இளைய தளபதி ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து தன் தேசிய நீரோட்ட கனவை வெளிப்படுத்தினார் விஜய். ஆனால் வயதை காரணம் காட்டி தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி மறுக்கப்பட்டதால் பின்னர் மௌனம் காத்தார்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் சேர்ந்தால் வளரவிடமாட்டார்கள். கழகங்கிளிடமிருந்து எம் ஜி ஆர் முதல் சரத்குமார் வரை பெற்ற அனுபவங்களிலிருந்து பாடம் கற்கும் விஜயும் எஸ் ஏ சி யும், தங்கள் 'லட்சிய பயயணத்திற்காக்' தேர்ந்தெடுத்திறுக்கும் பாதை தான் தேமுதிக."
இவர்களுடைய திட்டதிற்க்கு விஜயகாந்த் துணை நிற்பாரா என்று கேட்டதற்க்கு,"கேப்டன் இரண்டு காரணங்களுக்காக கட்டாயம் விஜயை தன் கட்சியில் சேர்த்துக்கொள்வார். ஒரு காரணம் எஸ் ஏ சி, மற்றொன்று விஜய் மூலமாக தேமுதிகவுக்கு கிடைக்க இருக்கும் நட்சத்திர அந்தஸ்து. விஜய் தனிக்கட்சி முடிவை எடுக்கும் போது அதை எப்படி எதிற்கொள்வது என்று அபபோது யோசிப்போம் என்பது விஜயகாந்தின் ஐடியா," என்றார் அவர்.
திட்டம் என்னவோ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை செயல்படுதுவதில் தான் விஜயின் அரசியல் வாழ்க்கை கில்லியாகுமா இல்லை குருவியாகுமா என்பது இருக்கிறது.