சென்னை, ஜுலை.28 தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் ஐடிஐ-களுக்கான பிட்டர் தொழில் பிரிவுகளுக்கான தேர்வு வினாளத்தாள்கள் வெளியானதை அடுத்து இன்று (ஜுலை.28) நடைபெறவிருந்த ஐடிஐ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த தேர்வு வினாத்தாள்கள் தமிழகத்தில் வெளியானதா அல்லது வேறு மாநிலங்களிலிருந்து வரப்பெற்றதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக்கு பின்னர் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்று ரத்து செய்யப்பட்ட கருத்தியல் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு வினாத் தாள்கள் தயார் செய்து தேர்வு நடத்தும் புதுதில்லியில் உள்ள மத்திய வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை ஆணையரின் அனுமதி பெறப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.