எல்லாம் அவன் செயல்', 'அழகர் மலை' ஆகியப் படங்களில் நடித்திருக்கும் ஆர்.கே, படப்பிடிப்பில் கண்ணாடிச் சிதறல்கள் குத்தி படுகாயம் அடைந்துள்ளார்.
ஆர்.கே நடித்துக்கொண்டிருக்கும் மூன்றாவது படம் 'புலிவேஷம்'. இப்படத்தில் ஆர்கேவுக்கு ஜோடியாக சதா நடிக்க, பி.வாசு இயக்குகிறார். இதில் ஆர்கேவுடன் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்.
ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார் இயக்குநர் பி.வாசு. இந்த சண்டைக்காட்சியில் ஆர்கே கண்ணாடியை உடைத்துக் கொண்டு பாயவேண்டும்.
டூப்பு போடாமல் இந்த காட்சியில் நடிக்க முடிவு செய்த ஆர்கே, கண்ணாடியை உடைத்துக்கொண்டு பாய்ந்தார். ஆனால் கண்ணாடிச் சிதறல்கள் ஆர்கேவின் முகம், கை, மார்பு ஆகிய பகுதிகளில் குத்தி கிழித்து விட்டது. இதனால் ஆர்கேவுக்கு இரத்த காயம் ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பை நிறுத்தி விட்டு ஆர்கேவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.