ரஜினிகாந்த நடித்த 'பில்லா' படத்தை மூன்றாண்டுகளுக்கு முன் ரீமேக் செய்தது அனைவரும் அறிந்ததே. அப்போது சரி இப்போதும் சரி 'பில்லா' நல்லா கல்லா கட்டியது. கார் ரேஷ் என்று சுற்றி வந்த அஜீத்திற்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது இப்படம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் விஷ்னுவர்தன்.
'பில்லா' ரீமேக்கை இயக்கியவரும் இயக்குநர் விஷ்னுவர்தன் தான். முழுக்க முழுக்க மலேசியாவில் கதை நடப்பது போல திரைக்கதையை மாற்றிய விஷ்னுவர்தன், ஹாலிவுட்படங்களுக்கு நிகராக இப்படத்தை இயக்கினார். இப்படத்தை பின்பற்றியே அஜீத்தின் சில படங்களும் வந்தது எனினும் பில்லா வெற்றியை அப்படங்கள் பெறவில்லை.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இரண்டாம் பாகத்திலும் அஜீத் தான் நடிக்கிறார். விஷ்னுவர்தன் தான் இயக்குகிறார். படத்தின் முழு திரைக்கதையையும் விஷ்னுவர்தன் எழுதி முடித்து விட்டார். இப்படத்தின் முறைப்படி அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருந்தாலும், படப்பிடிப்பு என்னவோ 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கிறது.