Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
    ஏவிஎம் செட்டியாருக்கு சிலை - முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் வாலி

சென்னை, ஜுலை.29   தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ள ஏவிஎம் நிறுவனமும், அதன் நிறுவனர் ஏவி மெய்யப்ப செட்டியாரும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்கள். பல தயாரிப்பு நிறுவனங்களும், பல ஸ்டுடியோக்களும் இருக்கும் இடம் இல்லாமல் போனாலும், அதே கம்பீரத்துடன் இன்னும் தனது ஏவிஎம் உலகத்தை சுழலவைத்துக் கொண்டிருப்பது ஏவிஎம் மட்டும்தான்.

இந்த பெருமைக்கு சொந்தகாரரான ஏவி மெய்யப்ப செட்டியாரின் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சொற்பொழிவு நேற்று (ஜூலை 28) சென்னை, ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஏவிஎம் சரவணன், ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் வாலி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய வாலி ஏவிஎம் செட்டியாருடன் தான் பழகியதையும், அவருடைய தேச பக்தி, மொழி பக்தி, கடவுள் பக்தி போன்றவற்றை பற்றி பேசி கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

மேலும் அவர் பேசுகையில் "தமிழ் சினிமாவிற்கு பல பெருமைகளை சேர்த்த ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு சென்னையில் எங்கயாவது ஒரு இடத்தில், அவருடைய திரு உருவச்சிலையை நிருவ வேண்டும். இந்த கோரிக்கையை நான் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் எடுத்துச் செல்வேன்" என்றார்.

தமிழ் திரையுலகத்தின் பல கோரிக்கைகளை ஏற்கும் முதல்வர், தமிழ் சினிமா உருவாவதற்கு உருதுணையாக இருந்த ஏவிஎம்-ன் சிலை கோரிக்கையை ஏற்க மாட்டாரா என்ன.



   More
வேட்டையனாகப்போகும் அஜீத்
செப்டம்பர் 11ஆம் தேதி 'எந்திரன்' டிரைலர் வெளியீடு
இந்திய திரைப்பட விழா
முரளி உடலுக்கு ரஜினி உட்பட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி
மோகன்லால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரேயா
சிந்துசமவெளி' பிரச்சனை : கைதாவாரா இயக்குநர் சாமி
பிரபல திரைப்பட நடிகர் முரளி காலமானார்
நட்புக்காக 'தா' படத்தை தயாரித்த தயாரிப்பாளர்
ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
'சிந்து சமவெளி' சர்ச்சை, இயக்குநரின் வீட்டில் கல் வீச்சு
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமணம்: தலைவர்கள்-திரையுலகினர் வாழ்த்து
'வ' தலைப்புக்கு விளக்கம் கொடுத்த இயக்குநர்கள்
மகளின் திருமணம்: ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரஜினி
தென் மாவட்ட வெற்றி : நடிகர் கார்த்திக் பேட்டி
அனுஷ்கா, தமன்னாவுக்காக போட்டி போடும் ஜவுளிக்கடைகள்
ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை ஜெனிலியா?
3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம்
'மிட்டாய்' பட இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவம்
இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு கொலை மிரட்டல்
'நெல்லு' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.