கொழும்பு, ஜுலை.29 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தார்.
முதல் இன்னிங்ஸில் பாலோ ஆனை தவிர்க்கப் போராடி வந்த இந்திய அணி தற்போது, சரிவிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறது. நேற்று தனது 48-வது சதத்தைப் பூர்த்தி செய்த சச்சின் இன்று நிலைத்து நின்று ஆடி இரட்டைச் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 5-வது இரட்டைச் சதமாகும் இது.
இதற்கு முன்பாக இந்தியாவின் வீரேந்திர சேவக் 6 இரட்டைச் சதங்களும், ராகுல் டிராவிட் 5 இரட்டைச் சதங்களும் அடித்திருக்கின்றனர். ஜாம்பவான் பிராட்மேன் 12 முறை 200 ரன்களை எட்டியிருக்கிறார்.
முதல் இன்னிங்ஸில் இலங்கை 642 ரன்களை அடித்திருக்கிறது. இந்தியா இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்திருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் 37 ஓவர் போக இன்னும் ஒரு நாள் ஆட்டமே மீதமிருப்பதால் ஆட்டம் டிராவில் முடியவே வாய்ப்பிருக்கிறது.