Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
   அழகிரிக்காக ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு? ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜுலை 29    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜுலை.29) வெளியிட்ட அறிக்கை

ஹரியானாவில் இருந்து சோழவந்தான் அருகே திருவாலயநல்லூருக்கு 12.7.2010-ல் லாரியில் கொண்டுவரப்பட்ட 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது தொடர்பான புகாரை சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஏற்கவில்லை.

நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இந்த வழக்கை விசாரித்து 2 மாதங்களில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

முதலில் இந்த புகாரை காவல் ஆய்வாளர் வாங்க மறுத்ததன் பின்னணி என்ன?

எனது ஆண்டிபட்டி தொகுதியில் கடமலைக்குண்டு பகுதியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 18.7.2010-ல் 8,700 பேருக்கு உதவிகளை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் 8700 பேருக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களை அழகிரி வழங்கியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியையும், சோழவந்தான் காவல் ஆய்வாளர் புகார் வாங்க மறுத்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அழகிரி பெயரில் ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.

எனவே இதை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.



   More
கடையடைப்பு உண்ணாவிரதப் போராட்டம்
தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
இலவச கேபிள் டிவி இணைப்பு : இளைஞர் பெரு மன்றம் கோரிக்கை
மது அடிமைகள் மறுவாழ்வு சிகிச்சை மையம்: ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
விளையாட்டுப் வீரர்களுக்கு ரொக்கப்பரிசு - ஸ்டாலின் வழங்கினார்
அதிமுக-வினர் மீண்டும் புகார் மனு
பெட்ரோல் விலை லி.க்கு ரூ. 1.10: டீசல் 60 பைசா உயரக்கூடும்?
தேமுதிக சார்பில் இப்தார் விருந்து: விஜயகாந்த் பங்கேற்பு
வேலை நிறுத்தம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது-மாநில தலைவர் அறிவிப்
தேமுதிக கூட்டணி உறுதி : பண்ருட்டி ராமச்சந்திரன்
சிறப்பு ரயில்கள் இயக்கம்
போராட்டத்திற்கு ஆதரவு: வங்கி ஊழியர்களும் நாளை ஸ்டிரைக்
நட்புறவு கிரிக்கெட்: துணை முதல்வர் அணி வெற்றி
கூட்டணி அமைக்க மாட்டோ ம் - விஜயகாந்த்
அதிமுக-வினர் மீது தாக்குதல்-ஜெயலலிதா அறிக்கை
வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
வைரமுத்து மகன் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.: 1,200 பேர் கண்தான ஒப்புதல்
தமிழக-தெற்கு ஆஸ்திரேலிய அமைச்சர்கள் பங்கேற்கும் கிரிக்கெட்

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.