Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
   திட்டக்குடி

சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், தன் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு போகும் சிறுவன் வளந்து என்னவாகிறான், அவனுடைய வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் படத்தின் கதை சுருக்கம்.

ரஜிகாந்தின் ரசிகனான ரவி, ஒரு சினிமா பைத்தியம். அதுவும் ரஜினி படம் என்றால் திரையரங்கில் இருந்து அப்படத்தை எடுக்கும் வரையில் பார்த்துக்கொண்ட இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ரஜினிபடத்தை தினமும் பார்க்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும் இதனால் பள்ளி படிப்பை விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு செல்கிறான்.

படிப்பு வராத பிள்ளையை என்ன பன்றது என்று பெற்றோர்களும் விட்டுவிட, வளர்ந்து பெரியவனாகும் ரவி, குடியும், கும்மாளமுமாக சுற்றுகிறார். ஊரில் உள்ள அனைத்து பெண்களிடமும் தனது மன்மத விலையாட்டை விளையாடும் ரவிக்கு, ஹுரோயின் அஸ்வதா மீது ஆசை வருகிறது (காதல் இல்லங்க...) ஆனால் அஸ்வதாவோ, ரவியை காதலிக்கிறார். அஸ்வதாவின் காதலை பயன்படுத்தி அவரிடமும் தனது ஆசை தீர்த்துக்கொள்ளும் ரவி, அஸ்வதாவை திருமணம் செய்ய மறுத்து விடுகிறார்.

இப்படி பல பேரின் வாழ்க்கையை கெடுத்த ரவியின் வாழ்க்கை எப்படி கெட்டுப்போகிறது என்பதுதான் சோகம் நிறைந்த முடிவு.

ரவி, அஸ்வதா என புதுமுகங்கள் தங்களின் வேலைகளை சரியாகவே செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஹுரோவின் நண்பனாக வரும் சிவா, திரையரங்கில் சிறிது சிரிப்பு சத்தத்தை ஏற்படுத்துகிறார்.

'எதார்த்தம்' இந்த வார்த்தையை எப்போது தமிழ் சினிமா மறக்குமோ, எதார்த்தம் என்ற பெயரில் இன்னும் என்ன என்ன விசயத்தை சொல்லப்போகிறார்களோ.

பல பேரை பாதித்த 'பருத்தி வீரன்' படம் 'திட்டக்குடி' படத்தின் இயக்குநர் சுந்தரனையும் பாதித்திருப்பது படத்தின் சில காட்சிகளில் தெரிகிறது.

இசையமைப்பாளர் செல்வ நம்பி, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பாடல்களை புரியும் விதத்தில் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கருப்பையாவின் கேமரா சாதரண லொக்கேஷனையும் ரசிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறது.


Share |
   More Reviews
கல்லூரி காலங்கள்
சிந்துசமவெளி
பலே பாண்டியா
விலை
நீயும் நானும்
நான் மகான் அல்ல
இனிது இனிது
வம்சம்
காதல் சொல்ல வந்தேன்
பாணா காத்தாடி
தம்பி அர்ஜுனா
தில்லாலங்கடி
ஆனந்தபுரத்து வீடு
மதராசபட்டினம்
அம்பாசமுத்திரம் அம்பானி
களவாணி
திட்டக்குடி
ராவணன்
ஓர் இரவு
சிங்கம்

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.